உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி ஜான்டூயி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பண்ருட்டி ஜான்டூயி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

நடுவீரப்பட்டு: பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.பத்தாம் வகுப்பில், தேர்வு எழதிய 242 மாணவர்களில் 241 பேர் தேர்ச்சி பெற்றனர்.மாணவி தான்யஸ்ரீ 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவர்கள் பாலமுருகன், சாதுன் தலா 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மஸ்குரா சலீம் 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். 11 பேர் 480க்கு மேலும், 74 பேர் 450க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர்.கணிதத்தில் 23 பேர், அறிவியலில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். அவர்களை பள்ளியின் தாளாளர் வீரதாஸ், முதுநிலை முதல்வர் வாலண்டினா லெஸ்லி, முதல்வர் மணிகண்டன், தலைமை ஆசிரியர் கனகராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை