உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குருவன்குப்பத்தில்  கும்பாபிேஷகம்

குருவன்குப்பத்தில்  கும்பாபிேஷகம்

விருத்தாசலம்: குருவன்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.மங்கலம்பேட்டை அடுத்த குருவன்குப்பம் மாரிம்மன், காளியம்மன் கோவில்கள் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாக பூஜைகள் நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு மேல், இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, மகா தீபாராதனை, காலை 9:30 மணிக்கு மேல், கடம் புறப்பாடுடன் விநாயகர், சப்த கன்னிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 10:15 மணியளவில், மாரியம்மன், காளியம்மன் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து மூலவருக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை