உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டையில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.அதையொட்டி, கடந்த மாதம் 26ம் தேதி அனுக்ஞை கோ பூஜை நடந்தது. 30ம் தேதி முதல் கால பூஜையும், நேற்று 1ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. இன்று நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.கும்பாபிஷேக தினமான நாளை (3ம் தேதி) காலை 6ம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9;45 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12;00 மணிக்கு மகா அபிஷேகம், 1:00மணிக்கு தீபாதரனை நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முத்துகுமாரசாமிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 9:30 பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ