உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அய்யனார் கோவிலில் மண்டலாபிேஷகம் நிறைவு

அய்யனார் கோவிலில் மண்டலாபிேஷகம் நிறைவு

நெல்லிக்குப்பம்: வெள்ளப்பாக்கம் பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவிலில், கும்பாபிேஷக மண்டலாபிேஷகம் நிறைவு விழா நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவிலில், ஜூலை 1ம் தேதி கும்பாபிேஷக விழா நடந்தது. இதை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிேஷகம் நடந்தது. நிறைவு விழாவான நேற்று, காலை சுவாமிக்கு சிறப்பு சங்காபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபடுபவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை