உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ.,வை கண்டித்து ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

பா.ஜ.,வை கண்டித்து ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி: பண்ருட்டியில் ம.தி.மு.க., சார்பில், தமிழகத்திற்கு நிதி அளிக்காத பா.ஜ.,வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, பொருளாளர் செந்திலதிபன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொருளாளர் மதன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் குணசேகரன், பிச்சை, ஆலோசனைக் குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் மோகனசுந்தரம், முன்னாள் அமைப்பாளர் ஹேமா, தலைமை செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய பா.ஜ., அரசை கண்டித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை