உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

நெல்லிக்குப்பம் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த சி.என்.பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் கவுதம், 24; திருவண்ணாமலை மாவட்டம் பெருந்துரைப்பட்டை சேர்ந்த பால்ராஜ் மகள் மேரிஅபி, 21; இருவரும் சென்னையில் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையறிந்த மேரி அபியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் கவுதம், மேரிஅபி இருவரும், பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருதரப்பு பெற்றோரும் தேடி வந்த நிலையில், காதல் திருமண ஜோடி, பாதுகாப்பு கேட்டு, நெல்லிக்குப்பம் போலீசில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் சீனிவாசன், இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து, சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை