உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம்

நெல்லிக்குப்பம் மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த பாஸ்கரன், உடற்கல்வி இயக்குனர் ராஜகெம்பீரம், ஆசிரியர் ஹெலினா சாந்தவதனி ஆகியோர் மாணவர்களின் கல்வியோடு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளை அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி அளித்து போட்டிகளில் கலந்து கொள்ள செய்கின்றனர்.அந்த வகையில், மேல்பட்டாம்பாக்கத்தில் நடந்து வரும் குறுவட்ட அளவிலான பாரதியார் தினம் மற்றும் சுதந்திர தினம் விளையாட்டு போட்டிகளில், இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், கைப்பந்து போட்டிகளில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அனைத்திலும் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு முன்னேறியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை