உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்பந்தில் தங்கம் வென்று நெய்வேலி மாணவிகள் சாதனை

கால்பந்தில் தங்கம் வென்று நெய்வேலி மாணவிகள் சாதனை

நெய்வேலி: நெய்வேலியில், கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகள் பங்கேற்ற பெண்களுக்கான மண்டல அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. கடந்த 25ம் தேதி மூன்று நாட்கள் நடந்த போட்டியில், 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் நெய்வேலி கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகள் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர். வெள்ளிப் பதக்கத்தை தாம்பரம் கேந்திரிய வித்யாலயா பள்ளியும், வெண்கலத்தை சென்னை கேந்திரிய வித்யாலயாவும் பெற்றது. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கோவை கேந்திரிய வித்யாலயா தங்கம் வென்றது. வெள்ளிப் பதக்கத்தை தாம்பரம் கேந்திரிய வித்யாலயா, வெண்கல பதக்கத்தை கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளி வென்றது.வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் என்.எல்.சி.,நகர நிர்வாகத்துறை பொது மேலாளர் சிந்து பாபு தலைமை தாங்கினார். என்.எல்.சி., கல்வித்துறை செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மத்திய தொழிலக பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., சிவக்குமார் மற்றும் அவரது மனைவி வித்யா பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை