உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சின்னத்தை காணாமல் முதியவர் பதற்றம்   கடலுார் ஓட்டுச்சாவடியில் திடீர் பரபரப்பு

சின்னத்தை காணாமல் முதியவர் பதற்றம்   கடலுார் ஓட்டுச்சாவடியில் திடீர் பரபரப்பு

கடலுார் : ஓட்டு மெஷினில் சின்னத்தை காணவில்லை என தி.மு.க.,வைச் சேர்ந்த முதியவர் பதறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் ஓட்டு சாவடியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் திருப்பாதிரிபுலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச் சாவடி மையத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் ஓட்டு போட வந்தார். பூத் சிலீப் காண்பித்து, தனது பெயர் சரிபார்க்கப்பட்டு கை விரலில் மை வைத்துக்கொண்டு ஓட்டுப் போட சென்றார். அப்போது அவர் தேடிச் சென்ற சின்னத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.பின் முதியவர் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் உதயசூரியன் சின்னத்தை காணவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டாார். இதனால் ஓட்டுச்சாவடியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது ஓட்டுசாவடியில் இருந்த பூத் ஏஜெண்ட்டுகள், முதியவரிடம் தி.மு.க., கூட்டணியில் காங்., தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதை விளக்கி கூறியதை தொடர்ந்து ஒருவழியாக சமாதானமான முதியவர் தனது ஓட்டை பதிவு செய்துவிட்டு சென்றார். இந்த சம்பவத்தால் ஓட்டுச்சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை