உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

வடலுார்: குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய குழுக் சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடந்தது.சேர்மன் கலையரசிகோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மேலாளர் லலிதா தீர்மானங்களை வாசித்தார்.கவுன்சிலர் ராஜபாண்டியன் பேசுகையில், 'வழுதலம்பட்டு ஊராட்சி, வன்னியர்பாளையம் கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என்றார். கவுன்சிலர் பாலகிருஷ்ணன் பேசுகையில், 'புலியூர்காட்டுசாகை பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி தற்போது பயன்பாடின்றி சேதமடைந்தது உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும்' என்றார்.கவுன்சிலர் தேவநாதன், கிருஷ்ணன்குப்பம் ஊராட்சி, கட்டியங்குப்பம் நடுத்தெரு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டித் தர வேண்டும்' என்றார். தொடர்ந்து குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்பது உட்பட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை