பரங்கிப்பேட்டை,: கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் அவரது மகன் சிதம்பரம் நகர துணை செயலாளர் அரிசக்திவேல் ஆகியோர் பிறந்த நாள் விழா நடந்தது.குமராட்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் மாலை அணிவித்து, கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஒன்றிய அவைத் தலைவர் பேராசிரியர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், வசந்தி சுதந்திரதாஸ், கொத்தட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி, ஊராட்சி துணைத் தலைவர் விஜயராஜா, தச்சக்காடு ஊராட்சி தலைவர் சிவசங்கரி ராம்மகேஷ், மாவட்ட சேர்மன் திருமாறன், பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், மாவட்ட துணை செயலாளர் செல்வம், மாவட்ட தொழில் நுட்ப பொருளாளர் சுவாமிநாதன், பிச்சாவரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வேணுகோபால், புவனகிரி துணை சேர்மன் வாசுதேவன், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், மீனவரணி சிவக்குமார், பாலமுருகன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.