உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்

தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்

கடலுார் : கடலுார் மாநகர தி.மு.க., சார்பில், அண்ணா பாலத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, கட்சி அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகர செயலாளர்ராஜா தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அகஸ்டின்பிரபாகரன், பகுதி செயலாளர்கள் சலீம், இளையராஜா முன்னிலை வகித்தனர்.தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டனர். மாணவரணி பாலாஜி, வழக்கறிஞர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள்பிரசன்னா, சங்கீதா செந்தில்முருகன், சங்கீதா, கவுன்சிலர்கள் பிரகாஷ், ஆராமுது,சுதா, விஜயலட்சுமி, சுபாஷினி, செந்தில்குமாரி, சசிகலா, கிரேசி கலந்து கொண்டனர்.

அண்ணாகிராமம்

அண்ணாகிராமம் ஒன்றியம் பி.என்.பாளையம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதி படத்திற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில்கண்ணதாசன், சம்பத், கிளை செயலாளர் சிவபிரகாசம், உமாபதி, கிருபா , சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் எழில்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை