உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓமன் கப்பலில் சிக்கிய மாலுமியை மீட்க மனு

ஓமன் கப்பலில் சிக்கிய மாலுமியை மீட்க மனு

விருத்தாசலம், : ஓமனில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய கடலுார் மாலுமியை மீட்கக் கோரி, வெளியுறவுத்துறை அமைச்சரிடம், கடலுார் எம்.பி., மனு கொடுத்தார்.ஓமன் டுக்ம் துறைமுகம் அருகே பிரெஸ்டீஜ் பால்கன் என்ற எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது. அதில், மாலுமியாக பணிபுரிந்த கடலுார் முதுநகர் தனஞ்செயன் உள்ளிட்ட 9 இந்தியர்கள் சிக்கினர். இந்நிலையில், மாலுமி தனஞ்செயனின் மனைவி எழிலரசி, தனது கணவரை விரைந்து மீட்டுத் தரக்கோரி, கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத்திடம் மனு கொடுத்தார்.அதன்படி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த எம்.பி., விஷ்ணு பிரசாத், மாலுமி தனஞ்செயன் உள்ளிட்ட இந்தியர்களை விரைவாக மீட்டுத்தரக் கோரி வலியுறுத்தி மனு கொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி