| ADDED : மே 24, 2024 05:28 AM
கடலுார்: கடலுாரில் செயற்கை பவளப்பாறைகள் தயார் செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட மீனவள கிராமங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தமிழகத்தில், சென்னை மாமல்லபுரத்தில் துவங்கும் கிழக்கு கடற்கரை சாலையில் கடலுார் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவ கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் உள்ள மீனவர்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலிலும், மீனவ மகளிர் மீன்பிடிப்பு சார்ந்த தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.கடலுக்கு அடியில் மீன்கள் உற்பத்தியாகி, வாழும் இடமாக பவளப்பாறைகள் உள்ளது. இந்த பவளப்பாறைகள் தற்போது அழிந்து வருகிறது. இதனால், ஆழ்கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைந்து, மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில், மீன்வளத்துறை சார்பில் கான்கிரீட்டால் செயற்கை பவளப்பாறைகள் தயாரித்து கடலில் போடும் பணி நடந்து வருகிறது.இதன் மூலம் கடலுக்கு அடியில் உள்ள மீன் உற்பத்தி இடங்கள் மற்றும் வாழ்விடங்கள் போன்றவற்றை பாதுகாத்து, அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால், பழைய நிலைக்கே மீன்கள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், செயற்கை பவளப்பாறைகளை உருவாக்குவதன் மூலம், மீன்பிடி தொழிலை மேம்படுத்த முடியும். மீன் உற்பத்தி தளமாகவும், சிறு மீன்களுக்கு மறைவிடமாகவும் பவளப்பாறைகள் பயன்படுகின்றன. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 41 மீனவ கிராமங்களில் மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க மீன்வளத்துறை சார்பில் செயற்கை பவளப்பாறைகள் தயாரிக்கும் பணி கடலுார் முதுநகர் பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கை பவளப்பாறை சிமென்ட் மற்றும் கம்பியை வார்ப்பு அச்சுகளில் இட்டு முக்கோணம், வளையம் மற்றும் வளைய தொகுப்புகள் ஆகிய 3 வடிவங்களில் உருவாக்கப்பட்டு வருகிறது.இவைகள் உலர்த்தி பின்பு படகுகள் மூலம் கடலுக்குள் போடப்படுகின்றன. இந்த பவளப்பாறைகள் ஒரு கிராமத்திற்கு தலா 190 எண்ணிக்கையில் பிரித்து கொடுக்கப்படுகி றது. இதற்கான பணிகள் முடிந்து, தற்போது லாரிகள் மூலம் செங்கல்பட்டிற்கு ஏற்றிச்செல்லும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.