உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

பண்ருட்டியில் திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மருங்கூர் ஊராட்சியில் திட்டப்பணிகளை, கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.மருங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டட பணியை பார்வையிட்டார். தொடர்ந்து, அதே பகுதியில் 66 ஏக்கரில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணிகள், அகழாய்வு ஆராய்ச்சி, அங்கன்வாடி மையம், கலைஞர் வீடு கட்டும் திட்டப்பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.பின்னர், காடாம்புலியூரில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினருக்கான குடியிருப்பு பணிகள், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கூடுதல் கலெக்டர் சரண்யா, ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பொதுப்பணித்துறை ெசயற்பொறியாளர் தணிகாசலம், உதவி பொறியாளர் டார்வின்குமார், உதவி இயக்குனர் சுவ்ப்னாஅஞ்சுகம், பி.டி.ஒ.க்கள் சங்கர், சக்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை