உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரோமாபுரி அந்தோணியர் ஆலய ஆண்டு பெருவிழா

ரோமாபுரி அந்தோணியர் ஆலய ஆண்டு பெருவிழா

மந்தாரக்குப்பம்: ரோமாபுரி புனித அந்தோணியர் ஆலய 26ம் ஆண்டு பெருவிழா தேர் பவனி நடந்தது.விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. புதிய கொடிமரம் புதுச்சேரி, கடலுார் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று (17 ம் தேதி) மாலை நவநாள் திருப்பலி, திருத்தேர் ஆலய பவணி, திருத்தேர் ஆசிர்வதிப்பு நடந்தது. இன்று (18ம் தேதி)மாலை 6:00 மணிக்கு கூட்டுத் திருப்பலி, அலங்கார தேர்பவனி, திருத்தேர் ஆசிர்வதிப்பு நடக்கிறது.பங்குதந்தைகள் ஏற்காடு செல்வநாயகம், கிறிஸ்துராஜ், சூசைராஜ், ஆலய வழிப்பாட்டுக்குழு தேவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை