பெண்ணாடம் : குள்ளஞ்சாவடி மற்றும் பெண்ணாடம் பகுதியில் மதுபாட்டில் விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.மே தினத்தையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் நேற்று காலை பெண்ணாடம், பெ.பொன்னேரி, மாளிகைக்கோட்டம், நந்திமங்கலம் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, சிலுப்பனூர் சாலை அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்ற சோழன்நகர் இளையராஜா, 40, என்பவரை கைது செய்தனர்.இதேபோல், மாளிகைகோட்டம் பகுதியில் எஸ்.எஸ்.ஐ., கோதண்டபாணி தலைமையிலான போலீசார் சோதனையில் ஸ்ரீமுஷ்ணம் கோ.ஆத்தூரை சேர்ந்த பாரதிராஜா, 32, என்பவரை கைது செய்னர். செய்தனர். குள்ளஞ்சாவடி
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று கோ.சத்திரம், குள்ளஞ்சாவடி கடைவீதி, மதனகோபாலபுரம் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது, கோ.சத்திரம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த, குணசேகரன், 50, குள்ளஞ்சாவடி, இருசப்பன் நகரை சேர்ந்த, பாலசுப்ரமணியன், அப்பியம்பேட்டையை சேர்ந்த, அன்பழகன், 55, மதனகோபாலபுரத்தை சேர்ந்த பாலமுருகன், 45, ஆகிய 4 பேரும், அந்தந்த பகுதியில், மதுபாட்டில்களை மறைத்துவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.அதைடுத்து, 4 பேரையும் குள்ளஞ்சாவடி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.