உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பரங்கிப்பேட்டையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பரங்கிப்பேட்டையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் உஷாராணி, கவுன்சிலர் அருள்முருகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவராக ரேவதி, துணைத் தலைவராக பிரவீனா, உள்ளாட்சி பிரதிநிதியாக கவுன்சிலர் அருள்முருகன், கல்வியாளராக குணசுந்தரி, முன்னாள் மாணவ உறுப்பினர்களாகமுகம்மது இஷாக், சக்கரவர்த்தி, சாஹிரா பானு, புஷ்பா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை பாராட்டி, வட்டார கல்வி அலுவலர் உஷாராணி சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை