| ADDED : மே 03, 2024 11:37 PM
விருத்தாசலம், - வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பவானி உடற்கல்வியியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது.விழாவிற்கு, தாளாளர் நாராயணன் தலைமை தாங்கினார். கல்விக்குழும செயலாளர் மகாலட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் பொன்சடையமுத்து வரவேற்றார். கல்லுாரி முதல்வர்கள் நல்லமுத்து, பாலமுருகன், பாலகிருஷ்ணன், உதவி பேராசிரியர்கள் ராஜா, ஞானபிரகாசம் வாழ்த்தி பேசினர்.அதில், மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெற்றோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.