உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்

குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவிலில் குருபெயர்ச்சி பூஜைகள் நடந்தது.குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நேற்று முன்தினம் மாலை பெயர்ச்சியானார். அதையொட்டி, நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை பாக்யராஜ் பூசாரி செய்தார்.பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகாரர்கள் விநாயகருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டனர். அதேபோல் பூலோகநாதர் கோவிலிலும் சிறப்பு பூஜைகளை குமார்,ஹரிபிரபோ குருக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை