உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிஜிட்டல் பேனரை அகற்றிய மாணவர்: டி.எஸ்.பி., முன்னிலையில் பரபரப்பு

டிஜிட்டல் பேனரை அகற்றிய மாணவர்: டி.எஸ்.பி., முன்னிலையில் பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அனுமதியின்றி கட்டியிருந்த பேனரை டி.எஸ்.பி., முன்னிலையில் பள்ளி மாணவர் அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் பஸ் நிறுத்தத்தில் நேற்று பகல் 1:00 மணியளவில், சாலை மறியல் போராட்டம்நடப்பதாக அறிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், முருகேசன் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பஸ் நிறுத்தத்தில் இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து தனியார் நிகழ்ச்சிகளை வரவேற்று, டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. இதைப்பார்த்த டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் பேனர்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார்.அங்கு வந்த பேனர் கட்டும் பணியாளர்களில் பள்ளி மாணவர் ஒருவர், திடீரென கம்பத்தில் ஏறி பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டார். பள்ளி சீருடையில் பேனரை அகற்றியதை கண்ட பொதுமக்கள் முகம் சுழித்தனர். இதைப்பார்த்த டி.எஸ்.பி., அதிருப்தியடைந்து, அவரை உடனடியாக கீழே வருமாறு அறிவுறுத்தினார்.பின்னர், மாற்று ஊழியர் ஒருவர் மூலம் பேனர்கள் அகற்றப்பட்டன. ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளையொட்டி பள்ளிகளில் உறுதிமொழி ஏற்கப்பட்ட நிலையில், பள்ளி சீருடையில் இருந்த மாணவர் ஒருவர் பேனரை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விருத்தாச்சலம் அடுத்த கோ. புவனூர் பஸ் நிறுத்தத்தில் அனுமதியின்றி கட்டியிருந்த டிஜிட்டல் பேனரை பள்ளி சீருடையில் அகற்றிய மாணவர்.விருத்தாச்சலம் அடுத்த கோ.புவனூர் பஸ் நிறுத்தத்தில் அனுமதியின்றி கட்டியிருந்த டிஜிட்டல் பேனரை பள்ளி சீருடையில் அகற்றிய மாணவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி