உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எடையூரை சேர்ந்தவர் சிவக்குமார், 54. கடந்த 7ம் தேதி கோமங்கலம் பெட்ரோல் பங்கில் இருந்து பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து நடந்து சென்றார். அவர் மீது விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் (டி.என்.05 - ஏ.எப்.7647) மோதியது.தலையில் பலத்த காயமடைந்த சிவக்குமார், புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி முனியம்மாள் புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை