| ADDED : ஜூலை 25, 2024 05:58 AM
கடலுார்: கடலுார் அருகே மாநகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் திருவந்திபுரம் சாலை கே.என்., பேட்டை அருகே விழுப்புரம்-நாகப்பட்டினம்புறவழிச்சாலை பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக நேற்று காலை சாலையோரம்பள்ளம் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, திருவந்திபுரத்தில்இருந்து கடலுார் மாநகராட்சிக்கு வரும் ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து, குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. இதனால், கடலுார் மாநகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.எனவே, உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.