உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதுப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு

புதுப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே நாடகமேடை உரிமை கொண்டாடியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டதால் பரபரப்பு நிலவியது. பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை ஊராட்சி, வாணியம்பாளையம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று புதுப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன், திரண்டு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனிடம் மனு அளித்தனர். மனுவில், வாணியம்பாளையம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் வரவு, செலவு கணக்கை பழைய நாட்டாமை பொதுமக்களிடம் காட்டவில்லை. கோவிலுக்கு சொந்தமான இடத்தினை இவரது பெயருக்கு பட்டா மாற்றி உள்ளார். ஊரில் உள்ள நாடக மேடையில் இயங்கி வரும் தற்காலிக ரேஷன் கடைக்கு வந்த பொருட்களை இறக்க சென்றவர்களை தடுத்து, இடம் எனக்கு சொந்தம் என, கூறுகிறார்.எனவே, கோவில் சொத்துக்களை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவினை பெற்ற இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ