உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் விருத்தாசலத்தில் மூவர் கைது

ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் விருத்தாசலத்தில் மூவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்தனர். விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வீரபாண்டியன் தெருவில் உள்ள மாயவேல், 48, என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அதில், அவரது கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூன்று மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதே பகுதியை சேர்ந்த சையத் இப்ராஹிம், 36. என்பவர் வீட்டில், 7 மூட்டை; அனந்தப்பன் மகன் ராஜ்குமார், 35, என்பவரது வீட்டில் 5 மூட்டை என ரூ.2 லட்சம் மதிப்பிலான 15 மூட்டை குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.குட்கா பொருட்களை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து, மாயவேல், சையத் இப்ராஹிம், ராஜ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை