உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

பெண்ணாடம், : இருவேறு இடங்களில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், சிவபெருமாள் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். ராஜேந்திரப்பட்டிணத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, 41; காவனுாரில் மதுபாட்டில் விற்ற கலியமூர்த்தி மனைவி சரஸ்வதி, 41, ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து தலா 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை