உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜமாபந்தியில் ஆர்.டி.ஓ.,விடம் ஊழல் புகார் வி.ஏ.ஓ., வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஜமாபந்தியில் ஆர்.டி.ஓ.,விடம் ஊழல் புகார் வி.ஏ.ஓ., வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திட்டக்குடி : திட்டக்குடி ஜமாபந்தி நிகழ்ச்சியில், வி.ஏ.ஓ.,குறித்து ஆர்.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்தவரோடு வி.ஏ.ஓ., வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை ஜமாபந்தி நிகழ்ச்சி துவங்கியது. விருத்தாசலம் ஆர்.டி.ஓ.,சையத்மெஹ்மூத், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.காலை 10.30 மணியளவில், கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் பேரின்பம் என்பவர், ஆர்.டி.ஓ.,விடம் மனுக்கள் கொடுத்தார். அம்மனுவில் கோடங்குடி வி.ஏ.ஓ.,மாரிமுத்து, பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறுவதாக புகார் தெரிவித்திருந்தார்.மனுவைப் படித்த ஆர்.டி.ஓ., அங்கு நின்று கொண்டிருந்த வி.ஏ.ஓ.,விடம் இம்மாதிரி புகார்கள் வராமல் நடந்துகொள்ளுங்கள். அரசு அதிகாரிகள் சேவை மனப்பான்மையோடு மக்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றார். அப்போது வி.ஏ.ஓ.,மாரிமுத்து, லஞ்சப்புகாரை மறுத்தார். புகார் தெரிவித்தவர்கள், தங்களிடம் ஆதாரம் உள்ளது என தெரிவித்தனர்.இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அருகிலிருந்த தாசில்தார் அந்தோணிராஜ், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினார்.ஆர்.டி.ஓ.,புகாரின் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்று புகார் தெரிவித்தவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை