உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., கட்சி தலைவர் பிறந்த நாள் விழா

வி.சி., கட்சி தலைவர் பிறந்த நாள் விழா

திட்டக்குடி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, சென்னை, வேளச்சேரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கடலுார் மேற்கு மாவட்ட அமைப்பாளர் தொழிலதிபர் பரமசெல்வம் தலைமை தாங்கினார். தலைமை நிலைய நிர்வாகி வீரராஜேந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.வி.சி., தலைவர் திருமாவளவன் பள்ளி, மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள், ஏழைகள் 500 பேருக்கு சேலை, 150 பேருக்கு தையல் மிஷின், அயர்ன் பாக்ஸ், தள்ளுவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.எம்.எல்.ஏ.,க்கள் ஆலுார் ஷா நவாஸ், பாலாஜி, பனையூர் பாபு, கடலுார் மாவட்ட செயலாளர் இளையா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை