உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க.,-அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போடுவது வீண்: பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் பிரசாரம்

தி.மு.க.,-அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போடுவது வீண்: பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் பிரசாரம்

விருத்தாசலம் : 'தி.மு.க.,வை 38 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்து என்ன கண்டீர்கள்' என விருத்தாசலத்தில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பினார்.கடலுார் தொகுதி பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான், விருத்தாசலத்தில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., - காங்., கட்சிகளுக்கு எத்தனை முறை ஓட்டு போட்டீர்கள். உங்களை மதித்தார்களா. பணம் இருந்தால் போதும், எங்கிருந்தோ வந்து போட்டியிடலாம் என நினைக்கின்றனர். இம்முறை அந்த தவறை செய்து விடாதீர்கள்.தமிழர்களை கொன்று குவித்தது காங்., அதுக்கு துணையாக இருந்தது தி.மு.க., அதுபோல அ.தி.மு.க.,வும் சளைத்தவர்கள் அல்ல. எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., இல்லை; அண்ணாதுரை உருவாக்கிய தி.மு.க., இல்லை; காமராஜர் துவங்கிய காங்., தற்போது இல்லை. எனவே, வரும் தேர்தலில் சிந்தித்து ஓட்டளியுங்கள்.38 தொகுதிகளில் தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்து என்ன கண்டீர்கள். என்ன காரணத்துக்கு தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட போகிறீர்கள். இருவருக்கும் ஓட்டுப்போடுவது வீண். இம்முறை எனக்கு ஓட்டு போடுங்கள். இல்லாவிட்டால் வருத்தப்படுவீர்கள். பிள்ளைகள் எதிர்காலத்துக்கான தேர்தல். எனவே, மாம்பழம் சின்னத்துக்கு ஓட்டுபோட்டு என்னை தேர்ந்தெடுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில மகளிரணி செயலாளர்கள் தமிழரசி, சிலம்புச்செல்வி, வன்னியர் சங்கத் தலைவர் சிங்காரவேல் மற்றும் பா.ஜ.க., மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள் சரவணன், வெங்கடேசன், செல்வராஜ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ