உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

பண்ருட்டி : பண்ருட்டி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த பெரிய கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 66; விவசாயி. இவரது மனைவி ஜெயா, 57; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இந்நிலையில், நேற்று காலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று இறந்தார்.புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை