உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்து இழப்பீடு வழங்காததால் கடலுாரில் 2 அரசு பஸ்கள் ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காததால் கடலுாரில் 2 அரசு பஸ்கள் ஜப்தி

கடலுார் : விபத்து இழப்பீடு தொகை வழங்காததால், கடலுாரில் 2 அரசு பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.காட்டுமன்னார்கோவில் தாலுகா பு.குடிகாடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் மனைவி சிவானந்தவள்ளி, 33; இவர், கடந்த 8.1.2019 அன்று சிதம்பரத்தில் இருந்து ஆண்டிமடத்திற்கு அரசு பஸ்சில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் சிவானந்தவள்ளிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.அதையடுத்து, விபத்து இழப்பீடு கேட்டு கடலுார் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலுார் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் சிவானந்தவள்ளி வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிபதி, விபத்து இழப்பீடாக 2 லட்சத்து 85 ஆயிரத்து 291 ரூபாய் சிவானந்தவள்ளிக்கு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.இழப்பீடு வழங்காததால், கடலுார் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் சிவானந்தவள்ளி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி அன்வர் சதாத், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு

விருத்தாசலம் தாலுகா கோட்டேரி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 37; இவர் கடந்த 21.4.2016 அன்று அரசு பஸ்சில் சென்றபோது விபத்தில் காயமடைந்தனர். அவரும், கடலுார் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி, விபத்திற்கு இழுப்பீடாக 4 லட்சத்து 20 ஆயிரத்து 707 ரூபாய் தமிழ்ச்செல்வனுக்கு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.ஆனால், தமிழ்செல்வனுக்கும் இழப்பீடு வழங்காததால், கடலுார் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி அன்வர் சதாத், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கடலுார் பஸ் நிலையத்தில், நின்றிருந்த விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 2 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை