| ADDED : பிப் 15, 2024 06:52 AM
கடலுார் : பறிமுதல் லாரியை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஆர்.டி.ஓ.,விற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் கோட்ட வருவாய் அதிகாரியாக கடந்த 2008ம் ஆண்டு பணிபுரிந்தவர் குழந்தைவேல்,72; இவர், பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரியை விடுவிக்க லாரி உரிமையாளரான கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர் கோட்டையை சேர்ந்த சிராஜூதினிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் மேற்பார்வையில், கடலுார் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரபாகரன், குற்றம் சாட்டப்பட்ட குழந்தைவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.