உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு சீல்

நெல்லிக்குப்பத்தில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு சீல்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாததால், 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, உள்ளாட்சி நிர்வாகங்கள், வரி வசூலை பிப்ரவரி மாதத்திலேயே முடிக்க உத்தரவிடப்பட்டு, அதிகாரிகள் பம்பரமாக சுழன்று, வரி வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.நெல்லிக்குப்பம் நகராட்சியில் வருவாய் பிரிவு அதிகாரிகள் மட்டுமின்றி அனைத்து அதிகாரிகளும் வீடு வீடாக வரி வசூல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வழக்கமாக மார்ச் மாதம் இறுதிக்குள் வரியை செலுத்துவது வழக்கம். ஆனால் தேர்தலை காரணம் காட்டி முன் கூட்டியே வரி கேட்பது தவறு என, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி வசூலில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் வரி செலுத்தாத பத்து கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைக்கு வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு இன்ஜினியர் பாரதி தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.அதேபோல் குடிநீர் கட்டணம் செலுத்தாத 9 வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !