உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

 கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் ரமணி, மணிகண்டன், அய்யப்பன், சிவா, நாராயணன், சரவணன் உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவபுரி சாலையில், சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிட மான வகையில், நின்றிருந்த இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிதம்பரம் அடுத்துள்ள, வல்லம்பகை மோகன் மகன் நவீன், 25; கோவிந்தசாமி மகன் ராஜா மகன் கவுதம், 25; வல்லத்துறை பகுதியை சேர்ந்த முருகன் மகன் அருள் (எ) ஜெயக்குமார், 30; ஆகியோர் என, தெரியவந்தது. மேலும் இவர்கள் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !