உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பியூஸ் கேரியர்கள் திருட்டு கடலுாரில் 3 பேர் கைது

பியூஸ் கேரியர்கள் திருட்டு கடலுாரில் 3 பேர் கைது

கடலுார் : கடலுாரில் புதைவட மின் கேபிள் பியூஸ் கேரியர்களை திருடிய ௩ பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மஞ்சக்குப்பம், கோண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் புதைவட மின் கேபிள் பியூஸ் கேரியர்கள் ஆங்காங்கே பில்லர் பாக்ஸ்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மஞ்சக்குப்பம், கோண்டூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அதிகாலை 1:30 மணி முதல் மின்சாரம் தடைப்பட்டது. தகவலறிந்த மின்வாரிய அலுவலர்கள் வந்து பார்த்தபோது, பியூஸ் கேரியர்கள் திருடுபோனது தெரியவந்தது. இதையறிந்த கடலுார் புதுநகர் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த மூன்றுபேர் பில்லர் பாக்ஸ்களை திறந்து பியூஸ் கேரியர்களை திருடிச்சென்றது தெரியவந்தது. குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த மூவரை நிறுத்தி பையை சோதனை செய்தனர்.இதில், பியூஸ் கேரியர் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், கடலுார், சோனங்குப்பம் பிரகாஷ் மகன் ரகு, 27; புதுப்பாளையம் நடராஜன் மகன் அரவிந்த், 22; கார்த்தி, 39; என்பதும் பியூஸ் கேரியரை திருடியதையும் ஒப்புக் கொண்டனர்.உடன், மூவரையும் போலீசார் கைது செய்து, கிலோ பியூஸ் கேரியர்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை