உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொம்மை வியாபாரி துாக்கு போட்டு தற்கொலை

பொம்மை வியாபாரி துாக்கு போட்டு தற்கொலை

சிதம்பரம்- சிதம்பரம் அருகே வியாபாரி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிதம்பரம் எம்.கே. தோட்டம் காத்தாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர பிரகாஷ், 23; பொம்மை வியாபாரி. கடந்த 17ம் தேதி நண்பர்களுடன் கபடி விளையாட செல்வதாக மனைவி மீனாவிடம் கூறியுள்ளார். அதற்கு, அடுத்த நாள் நாம் வியாபாரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் விளையாட செல்ல வேண்டாம் என மறுத்தாக தெரிகிறது. இதனால் பிரகாஷ் மன வருத்தத்தில் இருந்தார்.இந்நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கருவேல மரத்தில், பிரகாஷ் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பிரகாஷை மீட்டு, மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மனைவி மீனா அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை