உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாழங்குடாவிற்கு கூடுதல் பஸ் இயக்கம்; கடலூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

தாழங்குடாவிற்கு கூடுதல் பஸ் இயக்கம்; கடலூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கடலுார் : கடலுாரிலிருந்து தாழங்குடாவிற்கு கூடுதல் அரசு பஸ் சேவையை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.தாழங்குடா பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் நலன் கருதி கடலுாருக்கு கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில், கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க அய்யப்பன் எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுத்தார். தாழங்குடாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பஸ் சேவையை துவக்கி வைத்தார்.அரசு போக்குவரத்துக் கழக பணிமனை பொது மேலாளர் ராஜா, உதவி மேலாளர் (வணிகம்) ரகுராமன், ஊராட்சித் தலைவர் சாந்தி மதியழகன் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.இந்த பஸ் தினமும் காலை 5:00 மணி, 8:30 மணி, மதியம் 1:30 மணி, மாலை 5:00 மணி என நான்கு முறை இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை