உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவர் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

முதியவர் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கடலுார், : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் அடுத்த பூண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் கணேசன், 60; இவர், நேற்று காலை கடலுார் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிக்க வந்தார். அலுவலக நுழைவு வாயில் அருகே வந்தபோது, பையில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து, மண்ணெண்ணையை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், இருளக்குறிச்சி ஊராட்சியில் அவர் வசித்து வரும் இடத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு பள்ளம் தோண்டியிருப்பதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த இடத்தை எங்களிடம் ஒப்படைக்கக்கோரி சப் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். அதையடுத்த, போலீசார் அவரை எச்சரித்து, கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை