உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அழுகிய நிலையில் முதியவர் உடல் கொலையா என விசாரணை

அழுகிய நிலையில் முதியவர் உடல் கொலையா என விசாரணை

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே வயலில் அழுகிய நிலையில் கிடந்த முதியவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பெண்ணாடம் அடுத்த காரையூர் தங்கமுத்து என்பவரது வயலில் நேற்று மாலை 4:30 மணியளவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர். இறந்தவர் சிமென்ட் நிற பனியன் அணிந்த நிலையில் அரை நிர்வாணமாக கிடந்தார்.வி.ஏ.ஓ., சம்பத் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, முதியவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்