உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலெக்டரிடம் மனு கொடுக்க ஒப்புகை சீட்டுடன் வந்த முதியவர்

கலெக்டரிடம் மனு கொடுக்க ஒப்புகை சீட்டுடன் வந்த முதியவர்

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொது மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக முதியவர் ஒருவர் ஒப்புகை சீட்டுடன் வருகை தந்தார்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அப்போது முதியவர் ஒருவர் தலைமையில் பேப்பர் கட்டுடன் மனு கொடுக்க வந்தார். இவர் திட்டக்குடி வடகரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி 70, இவருக்கு அதேபகுதியில் உள்ள நிலத்தை பட்டாமாற்றம் செய்ய இதுவரை 67 முறை மனு கொடுத்தும் பட்டா மாற்றம் செய்யப்படவில்லை. அதனால் இதுவரை மனு கொடுத்த ஒப்புகை சீட்டை பத்திரமாக சேகரித்து அதை கையோடு கொண்டு வந்து மனு கொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ