உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலுார், : கடலுார் பார்வையற்றோர் அரசு தொடக்கப்பள்ளியில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டில், கடலுாரில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணி, மாதம் 12 ஆயிரம் மதிப்பூதியத்தில் நிரப்பப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் பட்டயப்பயிற்சி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான இளநிலை ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதியுடையோர், தலைமை ஆசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, வில்வ நகர், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, கடலூர்- 607001 என்ற முகவரிக்கு வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி