உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்

 மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்

நெல்லிக்குப்பம்: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் நேற்று மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். பிறகு இருமுடி சுமந்து சபரிமலை யாத்திரை சென்று, ஐய்யப்பனை தரிசிப்பர். கார்த்திகை 1ம் தேதியான நேற்று, நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை ஐய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. குருசாமி ராதா பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தார். மழையையும் பொருட்படுத்தாமல் கோவில் வந்த ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்தனர். கார்த்திகை 1ம் தேதி முதல் தை மாதம் 1ம் தேதி வரை 60 நாட்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொருளாளர் பழனி,குருசாமிகள் சிவகுருநாதன், கமலக்கண்ணன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடலுார் கடலுார் மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன் கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில், ஏராளமான பக்தர்கள் அதிகாலை சரண கோஷம் முழங்க குருசாமிகள் மூலம் துளசி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். இதேபோல் கடலுார் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நேற்று மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை