உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஐயப்ப மாலைகள் விற்பனை ஜோர்

 ஐயப்ப மாலைகள் விற்பனை ஜோர்

விருத்தாசலம்: கார்த்திகை மாதம் நாளை பிறப்பதால், விருத்தாசலத்தில் ஐயப்ப மாலைகள், பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. கார்த்திகை மாத துவக்கத்தில் இருந்து பெண்கள் தங்களது வீட்டு வாசலில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தெய்வ வழிபாடுகள் செய்வர். அதேபோல் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை, 1ம் தேதி அதிகாலையில் இஷ்ட தெய்வங்களை வணங்கி, குருசாமி முன்னிலையில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை துவங்குவர். அதன்படி, நாளை கார்த்திகை மாதம் துவங்குவதால், விருத்தாசலம் சன்னதி வீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்களுக்காக, மாலைகள், காவி மற்றும் கருப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில் வேஷ்டிகள், பூஜை பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வது அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை