உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூதாட்டி தாக்கு 3 பேர் மீது வழக்கு

மூதாட்டி தாக்கு 3 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே மூதாட்டியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் புதுக்காலனியை சேர்ந்தவர் சண்முகம், 24; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன், 50; என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக, நேற்று முன்தினம், முருகன் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி, 45; மகள் அபி, 22; ஆகியோர், சண்முகத்திடம் தகராறு செய்தனர். தடுக்க வந்த அவரது தாய் சின்னம்மாளை, 60; தாக்கினர். காயமடைந்த சின்னம்மாள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் முருகன், பரமேஸ்வரி, அபி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை