உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் - செல்லஞ்சேரி பஸ் அய்யப்பன் எம்.எம்.ஏ., துவக்கம்

கடலுார் - செல்லஞ்சேரி பஸ் அய்யப்பன் எம்.எம்.ஏ., துவக்கம்

கடலுார், : கடலுாரில் இருந்து செல்லஞ்சேரிக்கு புதிய பஸ் வழித்தடத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.கடலுாரில் இருந்து செல்லஞ்சேரி கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடலுாரில் இருந்து திருவந்திபுரம், வெள்ளகேட், துாக்கணாம்பாக்கம், காரணப்பட்டு வழியாக செல்லஞ்சேரிக்கு பஸ் இயக்க, அய்யப்பன் எம்.எல்.ஏ., நடவடிக்கை மேற்கொண்டார்.புதிய வழித்தடத்தில் பஸ் துவக்க விழா செல்லஞ்சேரியில் நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் ராஜா வரவேற்றார். அய்யப்பன் எம்.எல்.ஏ., புதிய பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, வீரமணி, ஊராட்சி தலைவர்கள் எம்.பி.அகரம் ஞானப்பிரகாசம், முத்துக்குமாரசாமி, தமிழரசி பிரகாஷ், செல்வராசு, துணைத் தலைவர் சாந்தி பாலமுருகன், நிலவள வங்கித் தலைவர் ராமலிங்கம், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், கிளை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொ.மு.ச., ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை மேலாளர் (வணிகம்) ரகுராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி