உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

திட்டக்குடி : திட்டக்குடியில் ஸ்டேட் பாங்க் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரியுள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் திட்டக்குடி கிளை சார்பில் வட்ட மாநாடு நடந்தது. வட்டத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தமிழரசி வரவேற்றார். செயலர் அன்பழகன் ஆண்டறிக்கையையும், பொருளாளர் சந்திரா நிதிநிலை அறிக்கையையும் படித்தனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வட்டத் தலைவராக திருநாவுக்கரசு, செயலராக அன்பழகன், துணைத் தலைவர்களாக தமிழரசி, பழனிச்சாமி, பொருளாளராக சந்திரா, இணைச் செயலராக கந்தசாமி, கலைவாணன், தணிகாசலம், தணிக்கையாளராக கனகாம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் திட்டக்குடியில் ஸ்டேட் பாங்க் திறக்க வேண்டும், அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திட்டக்குடி, முருகன்குடி, இறையூர் பகுதிகளில் கட்டப்படும் பாலங்களை விரைந்து முடிக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் செல்வராஜ், கிராம ஊழியர்கள் சங்கத் தலைவர் எஸ்மா கந்தசாமி, அலுவலக உதவியாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கோடி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி கார்த்திக், மக்கள் நல பணியாளர் சங்க நிர்வாகி ராஜேஸ்வரி, மாவட்டத் தலைவர் சுவாமிநாதன், மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை