உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருவரின் கண்கள் தானம்

இருவரின் கண்கள் தானம்

கடலூர் : கடலூர் காஸ்மாபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் இருவரின் கண்கள் தானமாக பெறப்பட்டது. கண் தானத்தின் அவசியம் குறித்து கடலூர் காஸ்மாபாலிட்டன் அரிமா சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதனையொட்டி இறந்தவர்களின் கண்களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த கண் மருத்துவமனைக்கு வழங்கி, பார்வையற்றவர்களுக்கு பார்வை கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி சமீபத்தில் இயற்கை மரணமடைந்த கடலூர் முல்லை நகர் ராஜாம்பாள், திருப்பாதிரிப்புலியூர் சஞ்சீவி நாயுடு தெருவைச் சேர்ந்த சோகன்ராஜ் ஆகியோரின் கண்களை அவர்களது குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை காஸ்மாபாலிட்டன் அரிமா சங்க தலைவர் அசோக்குமார் மேத்தா, செயலாளர் ஹத்தீஷ்குமார், பொருளாளர் துளசிதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை