உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதூரில் 8ம் தேதி கும்பாபிஷேகம்

புதூரில் 8ம் தேதி கும்பாபிஷேகம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த அரசடிக்குப்பம் புதூர் கிராமத்தில் விநாயகர், பாலமுருகன், மகமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 8ம்தேதி நடக்கிறது. விழா வரும் 7ம் தேதி காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, நவக்கிரக பூஜை யுடன் துவங்கி முதல் கால பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரர்பணம், யாகசாலை பிரவேசம், 2ம் கால பூஜை ஹோமங்கள் தீபாராதனை நடக்கிறது. 8ம் தேதி அதிகாலை 5 மணிக்கு 3ம் கால பூஜைகள், நாடி சந்தானம், கடம் புறப்பாடு, மகா பூர்ணாஹூதி 8.45 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை