உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்டாலின் கைதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் மறியல்

ஸ்டாலின் கைதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் மறியல்

கடலூர் : ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.திருத்துறைப்பூண்டியில் நேற்று ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து கடலூர் அண்ணா பாலம் சிக்னல் அருகே மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் உட்பட 61 பேரும், பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் முன்னாள் எம்.எல்.ஏ., நந்தகோபாலகிருஷ்ணன் உட்பட 24 பேரும், பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் நான்குமுனை சந்திப்பில் முன்னாள் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தலைமையில் 70 பேரும் கைது செய்யப்பட்டனர். பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.வடலூரில் ஒன்றிய செயலர் சிவக்குமார் ஆர்ப்பாட்டமும், விருத்தாசலம் பாலக்கரையில் நகர செயலர் தண்டபாணி, திட்டக்குடி அடுத்த ஆவட்டி கூட்டுரோட்டில் முன்னாள் எம்.பி., கணேசன் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பிற பகுதிகளில் தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை