உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீமுஷ்ணம் ஜூனியர் சேம்பர் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

ஸ்ரீமுஷ்ணம் ஜூனியர் சேம்பர் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஜூனியர் சேம்பர் சார்பில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் ஜூனியர் சேம்பர் சார்பில் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகள் பாரதிதாசன், முகேஷ், அப்ரின் ஆகியோருக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஜேசீஸ் சாசனத் தலைவர் முத்துராமலிங்கம் ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி, செயலர் விஜயன், முன்னாள் தலைவர்கள் சிவமுருகன், கிரி, துணைத் தலைவர் மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி